திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3648 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3648திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அவனுக்கு ஸ்மாரகமாய் அவ் வழியாலே நலிகை யன்றிக்கே தானே தனித்தனியே அக்னிமயமாய் தஹியா நின்றன -என்கிறாள்) 4
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4
பதவுரை Show / Hide
பாவியேன் மனத்தே நின்று ஊரும் ஆல் ஓ,Paaviyen manatthae ninru oorum aalO - பாவியேனுடைய நெஞ்சிலேயே நின்று நலியா நின்றதந்தோ
தண் வாடை வாடை,Than vaadai vaadai - தண்வாடையென்றே பேர் பெற்றிருந்த வாடைக்காற்றானது
வெம் வாடை ஆல் ஓ,Vem vaadai aalO - நெருப்பை யுமிழும் வாடையாயிரா நின்ற தந்தோ
மேவு தண் மதியம்,Mevu than madhiyam - விரும்பிப் பார்க்கப்படுகிற குளிர்ந்த சந்திரனும்
வெம் மதியம் ஆல் ஓ,Vem madhiyam aalO - உஷ்ணகிரணனான சந்திரனானானந்தோ
மெல் மலர் பள்ளி,Mel malar palli - ம்ருதுவான புஷ்ப சயனமும்
வெம் பள்ளி ஆல் ஓ,Vem palli aalO - நெருப்புப்படுக்கை யாயிற்றந்தோ
தூவி அம் புன் உடை,Thuvi am pun udai - சிறகுடைய பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்ட
தெய்வம் வண்டு,Deivam vandu - பரம புருஷனாகிற வண்டு
துதைந்த,Thuthainthu - அநுபவித்து ஸாரம் கவரப்பெற்ற
எம் பெண்மை இது,Em penmai ithu - எனது பெண்மையானவிது
ஆம் பூ ஆல் ஓ,Aam poo aalO - அழகியப்போலே பரிதாப்பத்தை ஸஹிக்க மாட்டாத தாயிரநின்றதந்தோ
வகைகள்,Vagaigal - இவ்வகைகளெல்லாம்
அவியின் பரம் அல்ல அந்தோ,Aviyin param alla andho - இவ்வாத்மாவுக்குப் பொறுக்கலாவனவல்ல