திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3649 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3649திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (அடியார்க்கெளியனென்று பேர் பெற்றவனுடைய இரக்கம் பெறுகை அரிதான பின்பு நம்முயிரைக் காக்கும் விரகுண்டோ வென்கிறாள்.) 5
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5
பதவுரை Show / Hide
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆல் ஓ,Yaamudai nenjamum thunai andru aalO - எம்முடைய நெஞ்சும் உசாத் துணைகாகின்றதில்லையந்தோ
ஆ புகும் மாலையும் ஆகின்று ஆல் ஓ,Aa pukum maalaiyum aakindru aalO - பசுக்கள் வந்து புகும் மாலைப் பொழுது மாகின்றதந்தோ
யாமுடை ஆயன்தல் மனம் கல் ஆல் ஓ,Yaamudai aayanthal manam kal aalO - எமது கோபாலக்ருஷ்ணனுடைய நெஞ்சு கல்லாய் விட்டதந்தோ
அவனுடை,Avanudai - அப்பெருமானுடைய
தீர் குழல் ஈரும் ஆல் ஓ,Theer kuzhal eerum aalO - இனிதான வேணுகானமும் நலியா நின்றதந்தோ
யாமுடை துணை என்னும் தோழிமாரும்,Yaamudai thunai ennum thozhimaarum - எமக்குத் துணைவரென்று பேர் பெற்றிருக்கின்ற தோழியரும்
எம்மில் முன்,Emmil mun - எனக்கு முன்னே
அவனுக்கு மாய் லர் ஆல் ஓ,Avanukku maai lar aalO - அவள் பொருட்டு நோவுபடா நின்றார்களந்தோ
அவனுடை அருள் பெறும் போது அரிது,Avanudai arul perum podhu aridhu - அவனது அருளைப் பெறுவது அரிதாயிரா நின்றது
யாமுடை ஆர் உயிர் எனக்கும் ஆறு என்,Yaamudai aar uyir enakkum aaru en - எனது அருமையான வுயிரைக் காக்கும் விதம் என்னோ