திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3650 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3650திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (பிராட்டியோடும், அஹங்காரிகளான பிரமன் சிவன் முதலானாரோடும் வாசியற உடம்பு கொடுக்குமவனுடைய சீலகுணம் என்னுயிரை ஈராநின்றதே யென்று குணவிசேஷத்திலீடு பட்டுச் சொல்லுகிறாள்.) 6
அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல அவன் அருள் பெருமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும் எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6
பதவுரை Show / Hide
அவனுடைய அருள் பெறும்,Avanudai arul perum - அவனோடு ஸம்ச்லேஷிப்பதாகிற அருளைப் பெறுவது அரிதாயிருக்கின்றது.
அவ அருள் அல் லன அருளும் அல்ல,Ava arul allana arulum alla - அவனுடைய அருள் அருளே யல்லது மற்றவை அருளல்ல
அவன் அருள் பெறும் அளவு,Avan arul perum alavu - அவனது அருளைப்பெறும் வரையில்
ஆலி நில்லாது,Aali nillaadhu - என் பிராணன் தரித்திருக்கமாட்டாது
அடு பகல் மாலையும்,Adu pakal maalaikum - பகலை முடிக்கும் மாலைப்பொழுதும் வந்து தோன்றிற்று
நெஞ்சும் காணேன்,Nenjum kaanaen - (தவரிமைக்கு உதவும்தான்) நெஞ்சையும் கான்கின்றிலேன்
சிவனொடு பிரமன் வரை திருமடந்தை சேர் திரு ஆகம்,Sivanodu piraman varai thirumadandhai seer thiru aagam - சிவனும் பிரமனும் பிராட்டியும் ஒருங்கே சேர்ந்திருக்கப் பெற்ற திருமேனியானது.
எம் ஆவி ஈரும்,Em aavi eerum - என்னாத்மாலை நலிகின்றது
இனி புகும் இடம் எவம்,Ini pukum idam evam - இனி எனக்கொதுங்குமிடம் எதுவோ!
எவம் செய்கோனோ,Evam seykono - யாது செய்வேன்
அன்னை மிர்கான்,Annai mirkaan - தாய்மார்களே
ஆருக்கு என் சொல்லுகேன்,Aarukku en sollugeen - ஆருக்கு என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன்