திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3651 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3651திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -கீழ்ச் சொன்ன பதார்த்தங்கள் எல்லாம் திரள வந்து கண் பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள்.) 7
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7
பதவுரை Show / Hide
கார் ஓக்கும் மேனி,Kaar oakkum meeni - காளமேகம் போன்ற திருவுருவத்தை யுடையனான
நம் கண்ணன்,Nam kannan - நமது கண்ணபிரான்
கள்வம்,Kalvam - தனது கள்ளக் செயல்களினால்
அவர்ந்த,Avandha - அபஹரித்துக் கொண்டு போன
அத் தனி நெஞ்சம்,Ath thani nenjam - நம்மை விட்டுத் தனியேயான நெஞ்சானது
அவன் கணஃது,Avan kanathu - அவன் பக்கலிலே யாயிற்று
சீ உற்ற அகில் புகை,See utrra akil pukai - பரிமளச் செல்வம்மிக்க அகிற்புகையையும்
யாழ் நரம்பு,Yaazh narambu - யாழின் நரம்பொலியையும்
பஞ்சமம்,Panchamam - பஞ்சமராகத்தையும்
தண் பகஞ்சார்ந்து,Than pakanchaarndhu - குளிர்ந்த சந்தனத்தையும்
அணைந்து,Anaindhu - கூட்டிக் கொண்டு
போர் உற்றவாடை,Poora utravaadai - போர் வுரியத் தலைப்பட்ட வாடையானது
தண் மல்லிகை பூ,Than mallikai poo - குளிர்நத மல்லிகைப்பூவினுடைய
புது மணம் முகந்து கொண்டு,Pudhu manam mugandhu kondu - செவ்விப் பரிமளத்தை முகந்து கொண்டு
எறியும் ஆல் ஓ,Eriyum aalO - வீசாநின்றதந்தோ