திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3653 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3653திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (நலிவதில் மற்றவையெல்லாம் ஒருதட்டாயும் அவனுடைய வேணுகானம் மாத்திரம் ஒருதட்டாயுமிருத்தலால் “ஊதுமத்தீங்குழற்கே உய்யேன் நான்” என்று மீண்டுஞ் சொல்லுகிறது.) 9
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப் பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9
பதவுரை Show / Hide
இடை இடை அது மொழிந்து,Edai edai adhu mozhinthu - இடையிடையே அபிப்ராய கர்பங்களான பாசுரங்களையிட்டு
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான்,Oodhum a theem kuzhalke uyyeen naan - ஊதுகிற இனிய அக்குழலோசைக்கே நான் முடிந்து போகின்றேன்.
தன் செய் கோலம்,Than sei kolam - தனக்குத்தானே செய்யப்பட்ட கோலத்தையுடைத்தாய்
தூதுசெய் கண்கள் கொண்டு,Thoodhusei kanngal kondu - தூது போகின்ற கண்களைக் கொண்டு
ஒன்று பேசி,Onru paesi - தன் கருத்தை வெளியிட்டு
தூமொழி இசைகள் கொண்டு,Thoomozhi isaihal kondu - இனிய பாசுரங்களையுடைய இசைகளைக் கொண்டு
ஒன்று நோக்கி,Onru nokki - கடாக்ஷித்து
பேதுறு முகம் செய்து,Paethuru mugam seythu - தன்னீடுபாடு தன் முகத்திலே தோன்றும்படி காட்டி
நொந்து நொந்து,Nonthu nonthu - அபலைகள் என்படுகிறார்களோ வென்று மிகவும் நொந்து
பேதை நெஞ்சறவு அற,Paethai nenjaravu ara - பெண்களினுடைய ஊடல் அறும்படியாக
பாடும் பாட்டை,Paadum paattai - பாடுகிற பாட்டை
ஆதும் ஒன்று அறிகிலம்,Aadhum onru arigilam - சிறிதும் அறியகில்லோம்
அம்ம அம்ம,Amma amma - ஐயோ
மாலையும் வந்தது,Maalaiyum vandhadhu - மாலைப்பொழுதும் வந்திட்டது
மாயன் வாரான்,Maayan vaaran - கண்ணன் வந்திலன்