| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3662 | திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான் , ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன்.) 7 | மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம் செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –9-10-7 | Virumbi thozhu vaarkku ellaam,விரும்பி தொழு வார்க்கு எல்லாம் - தன்னையே புருஷார்த்தமாக ஆசைப்பட்டு தொழுமவர்களெல்லார்க்கும் Meyyan aagum,மெய்யன் ஆகும் - மெய்யன்பனாய் Purame thozhuvaarkku ellaam,புறமே தொழுவார்க்கு எல்லாம் - பிரயோஜநாந்தாங்களுக்காக மேலெழுத் தொழுமவர்களுக்கெல்லாம் Poyyan aagum,பொய்யன் ஆகும் - தன்னை உள்ளபடி காட்டமாட்டாதவனாய் Seiyilvaalai ugalum Thiru Kannapurathu Aiyan,செய்யில்வாளை உகளும் திரு கண்ணபுரத்து ஐயன் - கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ண புரத்திலே யெழுந்தருளி யிருப்பவனான எம்பெருமான் Aagathu anaip paarkatku,ஆகத்து அணைப் பார்கட்கு - தங்கள் மனத்தில் ஊன்றவைத்துக் கொள்பவர்களுக்கு |