Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3667 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3667திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (கொடிய தாபத்திலே அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேக வர்ஷத்தையோ எதிரிபாரிப்பது ஸஹஜந்தானே; அதுபோல ஆழ்வாரும் தம்முடைய ஸாம்ஸாரிக தாபங்களெல்லாம் தொலையப்பெறும் ஸமயமாகையாலே இப்போது காளமேகப் பெருமாளைப் பெற்று ஸூகிக்கிறபடியைத் தெரிவித்தருளுகிறார். இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்; இவரையொழிய மற்றொன்று கதியிலம்…..வேறுதுணையுடையோமல்லோ மென்று அப்பெருமாளைப் பற்றுகிறார்.) 1
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1
தாள தாமைரை தடம்அணி,Thaala thaamarai tadam ani - தாளுரத்தையுடைய தாமரைகள் நிறைந்த தடாகங்களை அலங்காரமாகக் கொண்ட
வயல் திருமோகூர் நாளும் மேவி,Vayal thirumogoor naalum mevi - வயல்களாலே சூழப்பட்ட திருமோகூரிப்பதியை நித்திய வாஸஸ்தலமாகக் கொண்டு
நன்கு அமர்ந்து நின்று,Nangu amarnthu ninru - மிகவும் உகப்போட அங்குப் பொருந்தி நிற்குமவனாய்
கமலம் கண்,Kamalam kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய்
அசுரரை தகர்க்கும தோளும் நான்கு உடை,Asurarai thakarkkum tholum naangu udai - அசுரர்களை புடைக்க வல்ல நான்கு திருத்தோள்களையு முடையனாய்
கனி வாய்,Kani vaai - கனிந்த திருப்பவளத்தை யுடையனாய் ஸேவை ஸாதிக்கின்ற
சுரி குழல்,Suri kuzhal - சுருண்ட திருக்குழல் கற்றையை யுடையனாய்
காளமேகத்தை அன்றி,Kaalamegaththai anri - காளமேகப் பெருமாளைத் தவிர்த்து
மற்று ஒன்று கதி இலம்,Matru ondru gathi ilam - வேறொரு துணையுடையோ மல்லோம்