| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3678 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ப்ராப்யமான திருவனந்தபுரத்திலே சென்று சேருகைக்கு இடையூறுகள் பல உண்டே; அவையெல்லாம் திருநாமஸங்கீர்த்தனம் பண்ணின வளவிலேயே தொலையும்; அங்கே புக வாருங்கோள் என்று அநுகூலரையழைக்கிறார்.) 1 | கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1 | கேசவா என்ன இடர் ஆய எல்லாம் கெடும்,Kesavaa enna idar aaya ellam kedum - கேசவ நாமத்தைச் சொன்ன வளவில் துன்பமானவை எல்லாம் தொலைந்துபோம் விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்,Vidam udai aravil pallli virumbinaan - நச்சரவினனை மேல் விரும்பிப் பள்ளி கொள்ளுமவன் வர்த்திக்கிற நாளும் கொடுவினை செய்யும்,Naalum koduvinai seyyum - நிரந்தரமாகக் கொடுமைகளைச் செய்ய நிற்கிற சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்,Surumbu alatrum tadam udai vayal - வண்டுகள் ஆரவாரிக்கின்ற தடாகங்கள் நிறைந்த கழன்கிளையுடைய கூற்றின் தமர்களும் குறுககில்லார்,Koottin thamargalum kurugakillaar - யமபடர்களும் அணுகமாட்டாது ஓடிப்போவர்கள்; (ஆன பின்பு) அனந்தபுரம் நகர்,Ananthapuram nagar - திருவனந்தபுரமாகிற திவ்ய தேசத்தை இன்றே புகுதும்,Endrae pukuthum - இன்றே போய்ப் புகுவோம். |