| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3681 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஆஸ்ரியிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக -திருவனந்த புரத்தில் எம்பெருமானுக்கு அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்கிறவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ -என்கிறார் -அவர்கள் பாக்யம் பண்ணின படியைப் பேசுங்கோள் என்றுமாம்.) 4 | பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4 | பெரிய நீர் வேலை சூழ்ந்து,Periya neer velaai soozhndhu - பெரிய நீராகிய கடலாலே சூழப்பட்டு மலர்கள் தூவி,Malarhal thoo vi - புஷ்பங்களை பணிமாறி ஆராதிக்குமவர்கள் வாசமே கமழும் சோலை வயல் அணி,Vaasame kamazhum solai vayal ani - பரிமளமே நிறைந்த சோலைகளையும் வயல்களையும் அலங்காரமாகக் கொண்ட அனந்தபுரம்,Ananthapuram - திருவனந்தபுரத்திலே பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்த ஆறு ஏ,Punnayam seitha aaru ae - புண்ணிய செயத விதம் எனனோ! நேசம் செய்து உறைகின்றானை,Nesam seithu urai kindraanai - அன்பு பூண்டு நித்யவாஸம் பண்ணும் பெருமானை கூசம் இன்றி பேசுமின்,Koosam indri pesumin - (அந்த பாக்ய விசேஷத்தை நீங்கள் (கூசாமல் எடுத்துச் செல்லுங்கள் நெறிமையால்,Nerimaiyaal - முறை தவறாது |