| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3683 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (அயர்வறுமமரர்களும் வந்து அடிமை செய்கிறது திருவனந்தபுரத்திலே யாதலால் திருநாட்டிலுங்காட்டில் பரமப்ராப்யம் திருவனந்தபுரம்; நாமும் இங்கே சென்று அடிமை செய்யத்தகுமென்கிறார்.) 6 | அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும் குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6 | குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனார்,Kumaranar dhaathai thunbam thudaitha kovindanaar - முருகனது தந்தையான சிவபிரானது துன்பத்தைப் போக்கியருளின பெருமானாய் அகப்பணி செய்தவர் விண்ணோர்,Agappani seithavar vinnor - அந்தரங்கமான பணிவிடைகளைச் செய்யுமவர்கள் நித்ய முக்தர்களாயிருப்பார்; அமரர் ஆய் திரிகின்றார்கட்கு ஆதி,Amarar aay thirigindraarkatku aadhi - அமரரென்று பேர் பெற்றுத் திரிகின்றவர்களுக்கும் தலைவனாயிருக்குமவன் நமர்களோ,Namargaloo - தம்முடையவர்களே! சேர் அனந்தபுரத்து,Ser ananthapurathu - நித்யவாஸஞ் செய்கிற திருவனந்தபுரத்திலே சொல்ல கேண்மின்,Solla kearnmin - நாம் சொல்வதைக்கே உங்கோள்; அமரா கோன் அர்ச்சிக்கின்று அங்கு,Amaraa kon archikkindraangu - ஸ்ரீ ஸேனாபதியாழ்வான் ஆராதிக்க அதற்குப் பொருத்தமாக நாமும் போய் நணுக வேண்டும்,Naamum pooi nanuga vendum - அவர்களோடு நாமும் கூடிக் கைங்கரியம் பண்ண வேண்டும். |