திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3685 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3685திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் காண நடவுங்கோளென்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நியமித்தருளுகிறார்.) 8
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம் படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8
பதவுரை Show / Hide
எழில் அணி அனந்தபுரம்,Ezhil ani ananthapuram - அழகணிந்த திருவனந்தபுரம் திருப்பதி
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண,Padam udai aravil pallli payindravan paadam kaana - படங்களையுடைய வனத்தாழ்வான் மீது பள்ளி கொண்டருளும் அனந்த பத்மநாபனுடைய திருவடிகளை ஸேவிக்க நடவுங்கள்
காமனை பயந்த காளை இடவகை கொண்டது என்பர்,Kaamanai payantha kaalai idavakai kondaathu enbar - மன்மதனுக்கும் உத்பாதகனான பெருமாள் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட தலமென்பார்கள்;
நடமின் நாம் உமக்கு அறிய சொன்னோம்,Nadamin naam umakku ariya sonnom - (இதனை) நாம் உமக்குத் தெரிவித்தோம்; (இங்ஙனே செய்தால்)
நமர்கள் உள்ளீர் நம்மோடொரு ஸம்பந்தம் பெற்றவர்களாயிருப்பவர்களே!கடு வினை களையல் ஆகும்,Namargal ullir nammodoru sambantham petraavargalaayiruppavargale! Kadu vinai kalaiyal aagum - கொடிய பாவங்களை எல்லாம் போக்கப் பெறலாம்.