| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3686 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி – திருவனந்த புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் காணப் போருங்கோள் -என்று அனுகூலரை அழைக்கிறார்.) 9 | நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9 | நாம உமக்கு அறிய சொன்ன நாள்களும் நணிய ஆன (முன்பு),Naam umakku ariya sonna naalgalum nania aan (mumbhu) - நாம் உங்களுக்குத் தெரிவித்த சரீராவஸான நாளும் ஸமீபித்தது; தூமம் நல் விரை மலர்கள்,Thoomam nal virai malargal - (ஆன பின்பு அவ்விடத்திற்கு) தூபத்தியும் நறுமண மலர்களையும் செறி பொழில் அனந்தபுரம் சேமம் நன்கு உடைத்து,Seri pozhil ananthapuram semam nallkku udaiythu - செறிந்த பொழில்களையுடைய திருவனந்தபுரமானது நமக்கு நன்றாக க்ஷேமம் செய்ய வல்லது; துவள் அற ஆய்ந்து கொண்டு வாமனன் அடிக்கு என்று ஏத்த,Thuvaal araa aayndhu kondu vaamanan adikku enru aetha - பர்சுத்தமாக சேகரித்துக் கொண்டு எம்பெருமானுடைய திருவடிகளுக்கென்று ஸங்கல்பித்துத் துதிக்க, கண்டீர்,Kandheer - இதை அனுபவித்திலே காணலாமன்றோ; வினைகள் தானே பாய்ந்து அறும்,Vinaihal thaanae paayndhu arum - பாவங்களை தன்னடையே தொலைந்து போம். |