| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3688 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (இத்திருவாய் மொழி கற்கைக்குப் பலன் பரமபதத்தில் திவ்யாப்ஸரஸ்ஸுக்களாலே ப்ரஹ்மாலங்கார ப்ராப்தி பெறுவதென்கிறார்.) 11 | அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில் பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11 | அந்தம் இல் புகழ்,Andham el pugazh - அழிவில்லாத புகழை யுடையனான போய்,Pooi - (சாராவஸரனத்தில் அர்ச்சிராதி மார்க்கத்தாலே) சென்று அனந்தபுரம் நகர் ஆதி தன்னை,Ananthapuram nagar aadhi thannai - திருவனந்தபுர மென்னும் திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருக்கிற ஆதி புருஷனைக் குறித்து, அமர் உலகில்,Amar ulakil - நித்ய விபூதியில் கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல்,Kondu alar pozhil kurukoor maaran sol - பூங்கொத்துக்கள் அலருகிற பொழில் சூந்த திருநகர்க்குத் தலைவரான ஆழ்வார் அருளிச் செய்த பை நொடி மடந்தையர் தம் அழகிய ஹஸ்த பூஷணங்களணிந்த (பரமபதத்து) திவ்ய,Azhagiya hasta pooshanangal anindha (paramapadathu) divya - அப்ஸரஸ்ஸுக்கனுடைய ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களையும்,Aayiraththul aayiram paasurangalaiyum - வேய் மரு தோள் இணை வேய் போன்ற தோளினைகளால் நேரும் ஸத்காரங்களை,Vei poondra tholinigalal nerum sathkaarangkalai - ஐந்தினோடு ஐந்தும் வல்லார் இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள,eppaththu paasurangalaiyum oadha vallavargal - அணைவர் அநுபவிக்கப் பெறுவர்கள். |