திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3692 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3692திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (“ உங்களை நான விட்டுப் போவேனோ? பிரியேன், பிரியில் தரியேன், என்று நான் சொன்னதெல்லாம் மறந்தீர்களோ? என்னைப் பிரிந்து நீங்கள் படும் பாடெல்லாம் உங்களைப் பிரிந்து நான் படமாட்டேனோ? என் பிரிவை ஒருவாறு நீங்கள் பொறுத்திருந்தாலும் உங்கள் பிரிவு என்னால் பொறுக்குப போமோ!’’ என்றிப்படி சில வார்த்தைகளைக் கண்ணபிரான் ப்ரணயத்தின் மேலெல்லையில் நின்று சொல்ல; நாயனே! இந்தக் கள்ளப் பணிமொழிகள் தாம் எம்மை நீராயலைந்து கரைய வுருக்குகின்றன வென்கிறார்கள்.) 4
தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4
பதவுரை Show / Hide
கோவிந்தா தொழுத்தையோம் தனிமையும்,Govindha thozhuthaiyom thanimaiyum - கண்ணா! அடிச்சிகளான எங்களுடைய தனிமையையும்
இன் சாறு வெள்ளம்,En saaru vellam - இனிதான ரஸப்ரவாஹமானது
துணை பிரிந்தார் துயரமும்,Thunai pirindhaar thuyarumum - துணையான வுன்னைப் பிரிந்தார் படுமலமாப்பையும்
நினைகிலை,Ninaikilay - நினைக்கின்றாயில்லை;
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த,Paaviyaan manam agam thorum ul pukku azhutha - பாவியேனுடைய நெஞ்சின் அவகாசந்தோறும் மறக்க வொண்ணாதபடி ஸ்திரமாக
நின் செம் கனிவாயின்,Nin sem kanivaayin - சிவந்த கனி போன்ற திருபபவளத்தினின்று வந்த
நின்தோழுதனில் பசுக்களையே விரும்பி உனது,Nin thozhuthanil pasukkalaiye virumbi unadhu - தொழுலிலுள்ளன பசுக்களையே ஆதரித்து
இம்மை துறந்து இட்டு,Emmai thurandhu ittu - எங்களை அநாதரித்து விட்டு
கள்வம் பணி மொழி,Kalvam pani mozhi - க்ருத்ரமமான தாழ்ந்த மொழிகளானவற்றை
அவை மேய்க்க போதி,Avai meykka podhi - அவற்றை மேய்க்கப் போகா நின்றாய்
நினைதொறும்,Ninaithorum - (அதற்கு மேல்) நினைககும் போதெல்லாம்
பழுத்த நல் அமுதின்,Pazhutha nal amudhin - பரிப’வமாய்த் தெளிந்த அம்ருதத்தினுடைய
ஆவி வேம் ஆல்,Aavi vem aal - எங்கள் பிராணன் பர்தபிக்கின்றது அந்தோ!