திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3693 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3693திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணபிரானுடைய கள்வப்பணிமொழிகள் அமன்மேலும் வளருகையாலே மீண்டும் “பணிமொழி நினைதொறமாவி வேமால்’’ என்கிறாள்.) 5
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்–10-3-5
பதவுரை Show / Hide
பணிமொழி நினைதொறும் ஆவி வேம் ஆல்,Panimozhi ninaithorum aavi vem aal - ஆச்வாஸகரமாகச் சொல்லுகிற வார்த்தைகளை நினைக்குந்தோறும் நெஞ்சு வேவா நின்றது;
மணிமிகு மார்பினில்,Manimigu maarbinil - கௌஸ்துப மணிபேரொணி விஞ்சுகிற திருமார்பில்
முல்லை போது,Mullai podhu - முல்லைப் பூவாலே
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா,Pagal nirai meykkiya poya kannaa - பகலெல்லாம் பசுமேய்க்கப் போன கண்ணனே!
என் வன முலை கமழ்வித்து,En vana mulai kamazhvidhu - அழகிய முலையைப் பரிமளிக்கச்
உன் வாய் அமுதம் தந்து,Un vaai amudham thandhu - உன்னுடைய செய்து
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ,Pini avizh malligai vaadai thoova - தட்டவிழ்ந்து அலருகிற மல்லிகைப் பூக்களை வாடையானது தூவ,
அணி மிகு தாமரை கையை,Ani migu thaamarai kaiyai - அழகிய தாமரை போன்ற திருக்கையை
பெரு மதம் மாலையும் வந்தின்று,Peru madham maalaiyum vandhindru - பெரிய செருக்கோடே ( மத்த கஜம் போலே) மாலைப் பொழுதும் வந்தது;
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்,Adichiyom thalai misai nee aniyaai - அடிச்சியோம்£ன எங்களுடைய தலைமேலே நீ வைத்தருள வேணும்.