திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3694 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3694திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணா! நீ போமிடமெங்கும் உனக்கொரு குறையுல்லை கிடாய்; உனக்குக் காதலிமார்கள் எங்குமுளர்; எங்களையொழியவும் உனக்குச் செல்லுமாபோலே உன்னை யொழியவும் எங்களுக்குச் செல்லுமாகில் நாங்கள் வருந்த வேண்டாவே; நாங்கள் உன்னைப் பிரிந்து தாக்கமாட்டாமையன்றோ கதறுகிறோம்; உன் போக்கு எங்களுக்கு ஸஹ்யமன்று காண் என்கிறாள்.) 6
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம் பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6
பதவுரை Show / Hide
ஆழி அம் கணணா,Aazhi am kannanaa - அடல் போன்று விடாய் தீர்க்க வல்ல அழகிய திருக்கண்கடிளயுடிடயவனே!
எம் பெண்மை ஆற்றோம்,Em penmai aatrom - ( உன் பிரிவில்) எங்களுடைய பெண்மை கொண்டு ஆறியிருக்கமாட்டோம்;
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்,Adichiyom thalaimisai nee aniyaai - அடிச்சியோமான எங்கள் தலைமீது உன் அணி மிகு தாமரைக்கையை வைத்தருள வேணும்;
அடி தட கண் இணை நீரும் நில்லா,Adi thada kann inai neerum nilla - கூர்மையாய்ப் பெருத்திருத்துள்ள கண்களின் நீரானது தகைவு பட்டு நிற்கிறதில்லை;
நடுவு,Naduvu - நீ போகிற காரியத்தின் நடுவே
மனமும் நில்லா,Manamum nilla - நெஞ்சும் ஒரு நிலையில் நிற்கிறதில்லை;
அது தன்னாலே,Adhu thannaale - ஆகையினாலே
எமக்கு,Emakku - கணப்பொழுதும் பிரிவாற்றகிட்லலாத எங்களுக்கு,
உன் கோலம் பாதம் அது பிடித்து,Un kolam paatham adhu pidithu - உனது அழகிய திருவடிகளைப் பிடித்து
நின் பசு நிரை மேய்க்க போக்கு,Nin pasu nirai meykka pookku - நீ பசு மேய்க்கப் போவதானது
வெடிப்பு,Vedippu - பரிதாபகரம்;
உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க,Unakku arivaiyarum palar adhu nirka - உனக்கு அப்மதைகளாயிருக்கும் பெண்களோ பல்லாயிரவர், அது எப்படியாவது கிடக்கட்டும்;
அழல் மெழுகில் ளுக்குவேம்,Azhal mezhugil lukkuvaem - நெருப்பில் மெழுகு போலே உருகி வேகின்றது
எமது உயிர்,Emadhu uyir - எங்கள் ஆத்மாவானது