திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3696 | திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கீழ்ப்பாட்டில் “அசுரர்கள் தலைப்பெய்யில்’’ என்று அஸுர ப்ரஸ்தாவம் வந்ததே; அதுவே மேலும் அநுவர்த்திக்கிறது; இப்பாட்டுத் தொடங்கிப் பதிகம் முடியுமளவும் அஸுர பயமே விஞ்சிச் செல்லுகிறதாயிற்று.) 8 | அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–10-3-8 | பதவுரை Show / Hideஆங் அசுரர்கள் தலைப்பெய்யில் யவன் கொல் என்று,Aang asurargal thalaippeyyil yavan kol endru - நீ பசு மேய்க்கப் போகிற காட்டிலே அசுரர்கள் வந்து கூடினாலும் என்ன அபாயமாகுமோ வென்று கசிகையும் வேட்கையும் கலவியும் உள் கலந்து நலியும்,Kasikaiyum vedkaiyum kalaviyum ul kalandhu naliyum - நெஞ்சிலுள்ள ஈடுபாடும் மேன்மேலுமுண்டாகின்ற குதூஹலமும் கலவியும் இவை ஒன்று சேர்ந்து நலியா நிற்கும்; (ஆதலால்) என் ஆருயிர் ஆழும்,En aaruyir aazhum - அருமையான எனது உயிர் வருந்தா நின்றது; (ஆதலால்) என் கை கழியேல் என்னைப் பிரிந்து போகாதே; ஆன் பின் போகேல்,Aan pin pogel - சி பசுக்களின் பின்னே போகாதே; வசி செய்,Vasi sey - கண்டவர்களை வசப்படுத்த வல்ல உஉன் தாமரை கண்ணும் வாயும் கைகளும்,Un thaamarai kannum vaayum kaigalum - செந்தாமரை போன்ற உனது கண்களையும் வாயையும் கைகளையும் ஒசி செய் நுண் இடை உகக்கும் நல்லவரொடும்,Osi sey nun idai ugakkum nallavarodum - ஒசிந்த நுண்ணிடையையுடைய உனது காதலிமார்களுடனே பீதகம் உடையும் காட்டி,Peedhagam udaiyum kaatti - திருப்பீதாம்பர வடிய்ழகையுங் காட்டி, உழிதராய்,Uzhitharaai - திரிந்து கொண்டு இவ்விடத்திலேயே இரு. |