திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3697 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3697திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கீழ்ப்பாட்டில் * நீயுக்க்கு நல்லவரோடு முழிதராயே* என்று சொன்னதைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மையான வார்த்தையாகுமோ? ஏதோ நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே யொழிய, உங்களருகே நான் வேறு சில மாதரோடே கலந்து பரிமாறினால் அதை நீங்கள் பொறுத்திருப்பர்களோ? கண்ணாலேயே தஹித்து விடமாட்டீர்களோ?’’ என்று சொல்ல, அதற்கு மறுமாற்ற முரைப்பது இப்பாட்டு; உன்னோடு நாங்கள் கலவி செய்து அதனாலடையுமுகப்பிற்காட்டிலும், நீ உன் உகப்புக்கு இலக்கானாரோடு கூடி நெஞ்சிடர் தீர, அதனால் நாங்களடையுமுகப்பே எங்கட்கு உயர்ந்தது என்கிறது இப்பாட்டில்.) 9
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல் மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9
பதவுரை Show / Hide
எம்பெருமான் உமக்கும் நல்லவரொடும் வழி தந்து,Emperumaan umakkum nallavarodum vazhi thandhu - எமது தலைவனே! நீ உகக்கும்படியான நன்மைமிக்க ஆய்ச்சிகளோடே திரிந்து
பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு,Pala asurargal vendu uruvam kondu - பலவசுரர்கள் (மரூபிகளாகையாலே) வேண்டின வடிவுகளைக் கொண்டு
உன்தன் திருவுளம் இடர் கெடும் தோறும்,Unthan thiruvulam idar kedum thorum - உன் திருவுள்ளம் ஆனந்திக்குமளவில்
மிக நின்று உழிதருவர்,Miga nindru uzhitharuvar - மிகவும் திரிவர்கள்
நாங்கள் வியக்க இன்புறும்,Naangal viyakka inburum - அகப்பட்டால்
எம் பெண்மை ஆற்றோம்,Em penmai aatrom - பிறரைக் காதலிக்குமளவில் பொறாமைப்படும்படியான பெண்மையை யுடையோமலலோம்; (ஆகவே)
அவரொடும் நின்னொடு ஆங்கே,Avarodum ninnodu aangey - அவர்களும் நீயுமாகப் பிணக்கிடவே
அவத்தங்கள் விளையும்,Avathangal vilaiyum - ஏதேனும் பொல்லாங்கு விளையும்,
பசு மேய்க்கப் போகேல் ;,Pasu meykka pogel; - பசு மேய்க்கப் போகாதே கொள்
என் சொல் கொள்,En sol kol - என் சொல்லைப் பேணியருளாய்,
கஞ்சன் ஏவ,Kanjan eva - கம்ஸனுடைய ஏவுதலால்
அந்தோ!,Antho! - பிரிவாற்றகில்லேன்.