திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3699 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3699திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (ஆழ்வார் தாமருளிச் செய்த பதிகங்களுள் எம்பெருமானைப் பசுநிரை மேய்க்கப் போக வேண்டாவென்று நிஷேதித்த பாசுரமான இப்பதிகமும் மற்றைப் பதிகங்ளோடொக்க ஒரு பதிகமே! என்று தாமே விஸ்மிதராகிறார்.) 11
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல் சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள் மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல் அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11
பதவுரை Show / Hide
செம் கனி வாய்,Sem kani vaai - செங்கனி போன்ற அதரத்தையுடைய
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை,Mangaiyar aaychiyar aayndha maalai - ஆயர் மங்கைகள் அநுஸந்தித்த சொல் மாலையாய்
எங்கள் ஆயர் தேவு,Engal aayar devu - எங்களாயர் கொழுந்தாகிய
அவனோடும் பிரிவதற்கு இரங்கி,Avanodum pirivadharku irangi - அவனை விட்டுப் பிரிவதற்கு வருந்தி
அத்திருவடி,Aththiruvadi - அந்த ஸ்வாமியினுடைய
அங்கு தையல்,Angu thaiyal - அததிருவாய்ப் பாடியிலுள்ள ஒரு ஆய்ச்சி
திரு அடி மேல்,Thiru adi mel - திருவடிகளிலே,
அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன,Avan pasu nirai meippu ozhippaan uraiththana - அவன் பசு மேய்க்கப் போவதைத் தவிரிப்பதற்காகச் சொன்ன
பொருநல் சங்கணி துறைவன் வண் தென் குரு கூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்,Porunal sangani thuraivan van then kurukoor van sadagopan sol aayirathul - தமிரபர்ணியில் திருச்சங்கணி துறையை நிரூபகமாகவுடையரான திருக்குருகூராழ்வார் பணித்த ஆயிரம் பாடலினுள்ளும்
இவையும் பத்து,Ivaiyum paththu - இப்பதிகமும்
அவற்றின் சார்வே,Avatrin saarve - மற்றைப் பதிகங்களுக்குச் சொன்ன பலனைத் தரும்.