| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3700 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (உபய விபூதி நாதனாயிருந்துவைத்துப் பத்துடையடியவர்க் கெளிப்பனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தியோக ஸுலபமென்கிறார்.) 1 | சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன் நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1 | கார்மேகம் வண்ணன்,Kaarmegam vannnan - காளமேக நிறத்தனாய் கமலம் நயனத்தன்,Kamalam nayanathan - செந்தாமரைக் கண்ணாய் தமோதரன்,Damodharan - தம்பாலே கட்டுண்டு அடியவர்க்கெளியனானவனுடைய நீர்வானம் மண் எர் கால் ஆய் நின்ற,Neervaanam man er kaal aay nindra - பஞ்பூதஸவரூபியாய் நேமியான்,Nemiyann - திருமொழியை யுடையனாய் தாள்கள்,Thaalgal - திருவடிகளானவை பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையன்,Per vaanavargal pithattrum perumaiyan - பெரிய வானவர்களான நத்திய ஸூதிகள் வாய்வெருவும்படியான பெருமையை யுடையனாய் ( இப்படி உபய விபூ நாதனாய் வைத்து) தவ நெறிக்கு,Thava nerikku - பக்தி மார்க்கத்திற்கு. சார்வே,Saarve - எளியனவாம் |