திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3701 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3701திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் தாள்கள் தவநெறிக்குச் சார்வே * என்று பொதுப்படையாக அருளிச் செய்தார்; அது தம்மளவில் பலித்தபடியை யருளிச்செய்கிறார் இப்பாட்டுத் தொடங்கி.) 2
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும் திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும் இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2
பதவுரை Show / Hide
வனத்து இமையோர்க்கும் பெருமையன்,Vanathu imaiyorkkum perumaiyan - மேலுலகங்களிலுள்ள பிரமன் முதலானாரினும் பெருமை பெற்றவனாய்
என்றும் திருமெய் உறைகின்ற,Endrum thirumey uraiginra - எப்போதும் பிராட்டியானவள் தன் திருமேனியிலேயே வாழப் பெற்ற புண்டழீகாக்ஷன்
ஆகத்து அணையாதார்க்கு,Aagathu anaiyaadhaarkku - அவன் திருவுள்ளத்திலே கொள்ளப் பெறாதவர்ககு
செம் கண் மால் இங்கு இருமைவினை கடிந்து,Sem kan maal ingu irumaivinai kadindhu - இவ்விபதியிலே புண்யபாப ரூப உபய கருமளையும் போக்கி
காண்டற்கு அருமையன்,Kaandarku arumaiyan - காண முடியாதிருப்பவனாய்
நாளும் என்னை ஆள்கின்றான்,Naalum ennai aalkinraan - நாடோறும் என்னை அடிமைகொள்ளா நின்றான்