| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3703 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (அவன் திருவடிகளை நான் தலைமேல் பிணைந்தபடி கிடக்கட்டும்; அவன்றான் என் ஹ்ருதயத்திஎட்ளளே வந்து புகுகைக்கு க்ருஷி பண்ணின படியையும் அந்த’க்ருஷி பலித்தவாறே அவன் க்ருத’ருத்யனாயிருக்கிறபடியையும் கண்டு நான் களிக்கின்றே னென்கிறார்.) 4 | தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4 | சரணங்கள் தலை மேல் புனைந்தேன்,Saranangal thalai mel punaindean - அவன் திருவடிகளை என் தலை மேலணிந்து கொண்டேன்; என் மனத்துள் இருந்தானை,En manathul irundhaanai - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனுமான எம்பெருமானை ஆலின் இலை மேல் துயின்றான்,Aalin ilai mel thuyindraan - ஆலிலையில் கண் வளர்ந்தவனும், நிலை பேர்க்கல் ஆகாமை,Nilai perkall aakamaai - இந்நிலையில் நின்றும் மாற்ற வொண்ணாமையை இமையோர் வணங்க மலை மேல் தான் நின்று,Imaiiyor vananga malai mel thaan nindru - நித்யஸூரிகள் வணங்கும்படி திருமலையிலெழுந்தருளி நின்று (ஸமயம் பார்த்து) நிச்சித்திருந்தேன,Nischithirundhean - திணணமாக வெண்ணியிரா நின்றேன். |