| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3704 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இப்பாட்டில் “கள்வம் பெரிதுடையன்” என்பது உயிர்நிலையான வாசகமாயிருக்கும். அப்பெருமான் என்திறத்தில் செய்தருள நினைத்திருக்குமவை ஒரு வராலறியப்போமோ? என்கிறார்.) 5 | நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன் மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5 | என நெஞ்சம் கழியாமை,Ena nenjam kazhiyaamai - எனது நெஞ்சைவிட்டு அகலாதபடியான தன்மையை பிறர்க்கு மெச்சப்படான்,Pirarkku mechappadaan - பிறர்க்குத் தனது குணங்களைக் காட்டிக் கொடாதவனாய் நிச்சித்திருந்தேன்,Nischithirundhean - நிச்சயித்திருந்தேன் கை சக்கரத்து அண்ணல,Kai sakkarathu annala - திருக்கையிலே திருவாழியைக் கொண்ட ஸ்வாமி மெய் போலும் பொய் வல்லன்,Mey polum poy vallan - மெய் செய்வாரைப்போலே பொய் செய்ய வல்வலனாய் கள்வம் பெரிது உடையன்,Kalvam peridhu udaiyan - நாமறியாதன பலவும் பாரியா நின்றான் நாகத்து அணை யான் நமக்கு நச்சப்படும்,Naagathu anai yaan namakku nachchappadum - சேஷசாயியானவன் நமக்கு ப்ராப்யனாவன். |