| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3705 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இன்று வந்து அடிமைபுக்காரையும் “அல்வழக்கொன்று மில்லாவணி கோட்டியர் கோனபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்” என்று சொல்லும்படி நித்யாச்ர்தரைப் போலே விஷயீகாரிக்குமவன் திருவடிகளிலே விழப்பெற்றே னென்கிறார். 6 | நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப் பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே–10-4-6 | நாகம் அணையானை,Naagam anaiyaanai - சேஷசயன்னாய் மாகத்து இளமதியம் சேரும் சடையானை,Maagathu ilamadhiyam serum sadaiyaanai - ஆகாசத்திலுள்ள இளம் பிறை தங்குகின்ற சடையையுடைய சிவனை ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு,Gnaanathaal aagathu anaipparkku - பக்தியாக வடிவெடுத்த ஞானத்தினால் நெஞ்சிலே வைத்து அநுபவிக்கும் முமுக்ஷீக்களுக்கு பாகத்து வைத்தான் தன்,Paagathu vaiththaan than - தன் திருமேனியிலொரு பக்கத்திலே வைத்தவனான பகவானுடைய நாள்தோறும்,Naalthorum - எப்போதும் அருள் செய்யும்,Arul seyyum - அருள்செய்கின்ற ஸ்வாமியாய் பாதம் பணிந்தேன்,Paadham panindean - திருவடிகளை வணங்கப் பெற்றேன் |