| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3706 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கி யருளிச் செய்கிறார்.) 7 | பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7 | மணிநின்ற சோதி,Maninindra sothi - நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய் பிறவி கெடுத்து ஆளும்,Piravi kedutthu aalum - நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன் மதுசூதன்,Madhusoodhan - விரோதி நிரஸந சீலனாய் என் அம்மான்,En ammaan - அஸ்மத் ஸ்வாமியாய் அணி நின்ற செம்பொன் அடல் ஆழியான்,Ani nindra sempon adal aazhiyaan - தானே ஆபரணமாகப் போரும்படியாய்ச் சிவந்த பொன்போலே ஸ்ப்ருஹணீயனாய் மிடுக்கையுடையனான திருவாழியாழ்வானைக் கையிலேந்தினவனான பெருமான் பிணி ஒன்றும் சாரா,Pini ondrum saaraa - ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது பரமபரம்பரணை நெஞ்சே நாளும் பணி,Paramaparamparanai nenje naalum pani - (ஆன பின்பு) அப்பரமபுருஷனை நெஞ்சமே! நித்யமும் வணங்கி யநுபவி |