| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3707 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் “பணி நெஞ்சே! நாளும்” என்றவாறே உகந்திருந்தது நெஞ்சு; அதனைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அநுபவியென்கிறார்.) 8 | ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8 | ஆழியான்,Aazhiyaan - சக்ரபாணியாய் ஆழி அமரர்க்கும் அப்பாலான்,Aazi amararkkum appaalaan - கம்பீரர்களான நித்யஸூரிகளுக்கும் நிலமல்லாத மேன்மையையுடையனாய் பாழிஅம் தோளால் வரை எடுத்தான்,Paazhiam tholaal varai eduththaan - (அப்பசுக்களுக்கு ஆபத்து வந்தபோது) மிடுக்குடைய அழகிய திருத்தோளாலே மலயை யெடுத்துக் காத்தவனான பெருமானுடைய ஊழியான்,Oozhiyaan - ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய் பாதங்கள்,Paadhangal - திருவடிகளை ஊழிபடைத்தான்,Oozhipadaiththaan - காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய் என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய்,En nenje mara vaadhu vaazh kandaai - என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக. நிரைமேய்த்தான் பசுக்களை ரஷித்தவனாய்,Niraimeiththaan pasukkalai rashiththavanaai - வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக |