| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3709 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (ப்ரயோஜநாந்தரரர்களோ, உபாயாந்தர நிஷ்டர்களோ, ப்ரபந்தர்களோ யாராயினும் யாவாக்கும் எம்பெருமானே உபாயமென்று தலைக்கட்டுகிறார்.) 10 | வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10 | வகையால் மனம் ஒன்றி,Vagaiyaal manam onri - சாஸ்திரங்களிற் சொல்லுகிறபடியே நெஞ்சையொருங்கப் பிடித்து திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்சநின்ற,Thisai thoaru amarargal sendru irainjanindra - நின்ற நின்ற திக்குக்கள் தோறும் பிரமன் முதலிய தேவர்கள் வந்து பணியும் படியான, மாதவனை,Maadhavanai - திருமாலான தன்னை நாளும்,Naalum - காலந்தோறும் தகையான்,Thagaiyaan - ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமானுடைய புது புகையால் விளக்கால் மலரால் நீரால்,Puthu pugaiyaal vilakkaal malaraal neeraal - விலக்ஷணமான தூப தீப புஷ்ப தீர்த்தங்களாலே சரணம்தமர்கட்கு ஓர் பற்று,Saranamthamar kadku or patru - திருவடிகள் பக்தர்களுக்குச் சிறந்த புகலிடம் |