| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3710 | திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11 | பரம பரம்பரனை,Parama paramparanai - பராத்பரனையும் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Thodai anthaadhi or aayirathul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள் மல் திண் தோள்,Mal thin thol - மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற இப் பத்தும் கற்றார்க்கு,Ip paththum katraarkku - இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு மாலை,Maalai - ஸர்வேச்வரனை பற்று என்று பற்றி,Patru endru patri - தமக்குப் புகலாக வுறுதி யிட்டு கண்ணன் கழல் இணை ஓர் பற்று,Kannan kazhal inai or patru - கண்ணனது உபயபாதங்கள் வழுதி வளநாடன் சொல்,Vazhudhi valanaadan sol - ஆழ்வார் அருளிச்செய்த ஆகும்,Aagum - ஒப்பற்ற ப்ராப்யமாகும். |