திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3711 | திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (முதலிலே *வீடுமின் முற்றத்தில் “எண் பெருக்கந்நலத்தொண் பொருளீறில வண்புகழ் நாரணன்” என்று பஜனத்திற்கு ஆலம்பனமாகச் சொல்லப்பட்டதான மந்த்ரத்தை *எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே* என்று காட்டுகிறார்.) 1 | கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1 | பதவுரை Show / Hideகண்ணன் கழல் இணை,Kannan kazhal inai - அடியவர்க் கெளியனான பெருமானது திருவடியிணைகளை எண்ணும் திருநாமம்,Ennum thirunaamam - (நீங்கள்) சிந்திக்க வேண்டிய திருநாமம் நண்ணும் மனம் உடையீர்,Nannum manam udaiyeer - அடைய வேணுமென்கிற நெஞ்சையுடையவர்களே! நாரணம் ஏ திண்ணம்,Naaranam e thinnam - நாராயணமே; மற்றொன்றில்லை யென்பது திடம். |