Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3722 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3722திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (நெஞ்சே! எம்பெருமான் இன்று நமக்குப் பேரருள் செய்யக் கோலா நின்றான் அதுவும் நாம் விதித்தபடியே செய்யவேணுமென்று நம்முடைய நியமனத்தை யெதிரிபாரா நின்றான்; அந்தோ! இஃது என்ன குணம்! இக்குணத்தையநுபவிக்க இந்நிலவுலகில் ஆளில்லாமையாலே நாம் திருநாட்டிலேபோய் மூதுவரோடு கூடியநுவிக்கலாமா? வருகிறாயா? என்று தம் திருவுள்ளத்தோடே உசாவுகிறார்.) 1
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1
அருள் பெறுவார் அடியார் தம்,Arul peruvaar adiyaar tham - எம்பெருமானருளைப் பெறுவதையே நிரூபமாகவுடைய பாகவதர்களுக்கு
நமது விதி வகையே,Namadu vidhi vagaiyae - நாம் வித்ததபடியே யாம்; (ஆன பின்பு)
இனி,Ini - இனியொருநாளும்
அடியனேற்கு,Adiyanekku - அடிமைப் பட்டிருக்கு மெனக்கு
இருள் தருமா ஞாலத்துள் பிறவி,Irul tharumaa nyaalaththul piravi - இவ்விருள்தருமா ஞாலத்திற் பிறப்பை யான் வேண்டேன் நான் இச்சிக்கமாட்டேன்
ஆழியான்,Aazhiyaan - திருவாழியை யுடையனான எம்பெருமான்
மட நெஞ்சே,Mada nenjae - சபலமான மனமே!
அருள் தருவான் அமைகின்றான்,Arul tharuvaan amaikindraan - க்ருபை பண்ணுவானாகப் பொருந்தியிரா நின்றான்;
நீ மருள் ஒழி,Nee marul ozhi - இங்கேயிருந்து அநுபவிக்க வேணுமென்கிற வொரு மருளைத் தவிரப்பார்
அது,Adhu - அப்படி க்ருபை பண்ணுவது
வாட்டாற்றான் அடி வணங்கு,Vaattattraan adi vanangu - திருவாட்டாற்றொம் பெருமானது திருவடிகளை வணங்கு.