திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3723 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3723திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே ஸம்வாதமாயிருக்கிறது.) 2
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2
பதவுரை Show / Hide
மாஞாலம்பிறப்பு அறுப்பான்,Maanjaalampirappu aruppaan - இருள் தருமா ஞாலத்தில் ஜன்ம ஸம்பந்தத்தைத் தொலைப்பதற்காக
பழ வினைகள் பற்று அறுத்து,Pazha vinaihal patru aruththu - அவித்யை கருமம் முதலான அநாதியான தொல்லைகளை யறுத்து
வாட்டாற்றான் அடி வணங்கி,Vaattattraan adi vanangi - திருவாட்டாற் றெம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி
நாட்டாரோடு இயல்வுஒழிந்து,Naattaarodu iyalvuzhinthu - உலகத்தாரோடு ஸஹவாஸத்தையும் தவிர்த்து
நாரணனை,Naaranana - ஸ்ரீமந் நாராயணனை
நண்ணினம்,Nanninam - கிட்டப்பெற்றோம்
கேசவன் எம்பெருமானை,Kesavan emperumaanai - கேசவனான பெருமானை
பாட்டு ஆயபலபாடி,Paatu aayapadapaadi - பாட்டானவை பலவும்பாடி
மடநெஞ்சே கேட்டாயே,Mada nenjae kaettaiye - நெஞ்சே! பெற்ற பேற்றின் கனத்தைக் கண்டாயே.