Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3724 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3724திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே கொண்டாடிச் சொல்லுகிறது. நம்முடைய பேற்றுக்கு அவன் விரையும்படியாயிற்றே! இப்படியாகுமென்று நாம் கனவிலாவது எண்ணினதுண்டோ? நாமெண்ணினதொன்று, நிகழ்ந்தது மற்றொன்றாயிற்றே! இதுவென்! என்று வியக்கிறார்.) 3
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3
என் நெஞ்சே,En nenjae - என்னுடைய அனுபவத்திற்கு வாய்த்தநெஞ்சே!
வளம் மிக்க வாட்டாற்றான் வந்து,Valam mikka vaattattraan vandhu - திருக்கல்யாண குணம் ருத்தி பொருந்திய திருவாட்டாற்றெம்பெருமான் தானே வந்து
பல நாமங்கள் சொல்லி,Pala naamangal solli - பல திருநாமங்களையுஞ் சொல்லி
இன்று விதிவகையே விண் உலகம் தருவான் ஆய்,Inru vidhi vagaiyae vin ulagam tharuvaan aay - இப்போது நமது நியமனப் படியே திருநாடு தருபவனாகி
நாராயணனை நண்ணினம்,Naarayananai nanninam - பரமபந்துவான ஸ்ரீமத் நாராயணனைக் கிட்டப்பெற்றோம்
விரைகின்றான்,Virainkinraan - துர்தனாயிரா நின்றான்
இக்கருமங்கள்,Ikkaarumangal - இக்காரியங்கள்
மண் உலகில்,Man ulakil innilaththil - இந்நிலத்திலே
எண்ணின ஆறு ஆகா,Ennin aaru aakaa - நாம் எண்ணினபடிக்கு மேற்பட்டு விட்டதே.