திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3725 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3725திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (கீழ் முதற்பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும் “விதிவகையே” என்று, எம்பெருமான் நியாமகனாயிருக்கு மிருப்புத்தவிர்ந்து நியாமகனா யிருக்கும்படியை யருளிச்செய்தாரே, ஸர்வேச்வரனிடத்தில் இது ஸம்பவிக்குமோ வென்று சிலர்சங்கிப்பர்களென்று கருதி அந்த சங்கைக்குப் பாரிஹாரமாக இப்பாட்டு அருளிச் செய்கிறபடி.) 4
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான் நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே–10-6-4
பதவுரை Show / Hide
நல் நெஞ்சே!,Nal nenjae! - நல்ல மனமே!
படைதொட்டான்,Padaiththottan - ஆயுதமெடுத்த பஷபாதியாய்
வல் நெஞ்சத்து இரணியனை,Val nenjaththu iraniyanai - வலிய நெஞ்சையுடையனான இரணியாசுரனது
நம்பெருமான்,Namberumaan - நமக்கு ஸ்வாமியானவன்
மார்பு இடந்த,Maarpu idandha - மார்பை இருபிளவாக்கி முடித்தவனாய்
என் நெஞ்சத்துள் இருந்து,En nenjaththul irundhu - என்னெஞ்சினுள்ளே பொருத்தியிருந்து
இங்கு,Ingu - இவ்விருப்பிலே
வாட்டாற்றான்,Vaattattraan - திருவாட்டாற்றிலே ஸன்னிதி பண்ணியிருப்பவனாய்
இரு தமிழ் நூல் இவை,Iru thamizh nool ivai - பெரிய தமிழ் நூலாகிய இத்திருவாய்மொழியை
மன் அஞ்ச,Man anja - அரசர்களெல்லாரும் அஞ்சும்படி மொழிந்து தானே யருளிச்செய்து
பாரதத்து,Bharathaththil - (அவ்வளவோடு நில்லாமல்) பாரதப் போரிலே
பாண்டவர்க்கு ஆய்,Pandavarkku aay - தன்னடியர்களான பாண்டவர்களுக்காக
நமக்கு அருள் தான் செய்வானே,Namakku arul thaan seivaane - நமக்கு மேன்மேலு முதவிகளைச் செய்வானாயிராநின்றான்.