திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3727 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3727திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (தாம் பெற்ற பேறுகளை ஒன்றிரண்டு மூன்றென்று எண்ணுகிறார். திருவடிகளை என் தலைமேலே வைத்தருளினான், அழகிய திருக்கண்களாலே என்னைக் குளிர நோக்கி யருளா தின்றான்; ஒருகாலும் என்னெஞ்சில் நின்றும் நிலை பேரான் – இவையன்றோ நான்பெற்ற பேறுகளென்கிறார்.) 6
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான் நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான் மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6
பதவுரை Show / Hide
தாள் இணைகள் தலை மேல,Thaal inaihal thalai mel - அவனது உபய பாதங்கள் எனது தலைமேலுள்ளன
மலை மாடத்து வாட்டாறு,Malai maadaththu vaattaaru - மலைபோன்ற மாடங்களையுடைய திருவாட்டாற்றிலே
தாமரை கண் என் அம்மான்,Thaamarai kan en ammaan - புண்டாரிகாஷனான அஸ்மத் ஸ்வாமியாய்
அரவு அணைமேலான்,Aravu anaimelaan - சேஷசயனத்தின் மீது கண் வளர்ந்தருள்பவனாய்
என் நெஞ்சத்து,En nenjaththu - எனது நெஞ்சிலே
எம்பொழுதும் நிலை பேரான்,Empozhuthum nilai peraan - ஒரு போதும் நிலைபெயராது நிரந்தரவாஸம் செய்பவனாய்
மதம்மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான்,Madammikha kolaiyaanai maruppu osiththaan - மதமிகுதியினால் கொலையிலே முயன்ற குவலயாபீட யானையின் கொம்பை முறித்தவானான பெருமானுடைய
எம்பெருமான்,Namberumaan - தன்னுடைய பெருமைய எமக்குக் காட்டிக் கொடுத்தவனாய்
குரை கழல்கள்,Kurai kazhalgal - வீரக்கழலினோசை பொருத்திய திருவடிகளை
குறுகினம்,Kuruginam - கிட்டப் பெற்றோம்.