திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3729 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (தாம்பெற்ற பேற்றின் கனத்தை யாராய்ந்தார்; அந்தோ! இப்படிப் பட்ட விஷயீகாரம் என் திறத்தேயுண்டாகுமாறு நான் என்ன ஸுக்ருதம் செய்தேன்! ஒன்றும் செய்திலேன்! அப்படியிருக்கவும் இது என்ன விலக்ஷண விஷயீகாரம்! என்று நெஞ்சு குழைகிறார்.) 8 | மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8 | பதவுரை Show / Hideமெய்நின்று கமழ்,Mey nindru kamazh - திருமேனியிலே நிலைநின்று கமழா நின்ற புனல் மை நின்ற வரை போலும் திரு உருவன்,Punal mai nindra varai polum thiru uruvan - புனலையும் அஞ்சனத்தையும் நிலை நிற்கும் மலையையு மொத்திருக்கின்ற திருவுருவத்தை யுடையனான துலபம்,Thulabam - திருத்துழாயினுடைய வாட்டாற்றாற்கு,Vaattattraarkku - திருவாட்டாற்றெம்பெருமாளுக்கு விரை ஏறு திரு முடியன்,Virai eru thiru mudiyan - பரிமளம் மிகப் பெற்ற திருமுடியை யுடையவனாய், கருதும் இடம் பொருது,Karuthum idam porudhu - திருவுள்ளம் நினைத்த விடத்தே சென்று போரை நடத்தி எந்நன்றி செய் தேன் ஆ நான்,En nandri sei then aa naan - என்ன நன்மை செய்தேனாகக் கொண்டு கை நின்ற,Kai nindra - உடனே திருக்கையிலே வந்து சேருகிற சக்கரத்தன்,Sakkarathan - திருவாழிப்படையை யுடையனாய் என் நெஞ்சில் திகழ்வது,En nenjil thigazhvadhu - அவன் எனது நெஞ்சில் விளங்குவது |