திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3731 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3731திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறலாகும்’ என்றொரு பழமொழி யுண்டாம்; அதனைத் திருவாட்டாற்றெம்பெருமான் அநுஷ்டாந பரியவஸாயி யாக்கினானென்று ஆனந்தம் பொங்கி யருளிச் செய்கிறார்.) 10
பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான் அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10
பதவுரை Show / Hide
பிரியாது ஆள் செய் என்று,Priyaadhu aal sei endru - ஒருகணமும் பிரியாதிருந்து அடிமை செய்யக் கடவாயென்று அநுக்ரஹித்து
ஆகம் கீண்டான்,Aagam keendaan - உடலைப் பளிந்தவனாய் (அந்த சிரமம் தீர)
வாட்டாறு,Vaattaaru - திருவாட்டாற்றிலே
பிறப்பு அறுத்து அற ஆள் கொண்டான்,Pirappu aruththu arra aal kondaan - ஸம்ஸாரப் பற்றைப்போக்கி மிகவும் அடிமை கொண்டவனாய்
வாரி வாள் வாய் அரவு அணை மேலான்,Vaari vaal vaai aravu anai melaan - சேஷசாயியாயிருக்கு மெம் பெருமான்
அன்று,Andru - முன்பொரு காலத்தில்
அர் ஆகி,Ar aagi - நரசிங்க மூர்த்தியாகி
இரணியனை,Iraniyanai - இரணியாசுரனுடைய
பெரியார்க்கு ஆள்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு காட்டினள்,Periyaarkku aal pattakkaal peraadha payan perum aaru kaattinaal - பெரியவர்களுக்கு அடிமைப்பட்டால் பெறுதற்காரிய பயனையும் பெற லாகுமென்பதைக்காட்டி விட்டான்