| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3732 | திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்குமதான இப்பாட்டில் ஆயிரத்துளிப்பத்துங் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்; இது பயனுரைத்ததாக எங்ஙனே யாகுமென்று சிலர்சங்கிப்பர்கள்; கேண்மின்; நித்யஸூரிகள் இப்பாசுரங்களைக் கேட்பது எவ்விதமாக? என்று பார்க்க வேணும். இங்கிருந்து போரும் முக்தர்கள் சொல்ல, அவர்களது வாய்வழியே கேட்கவேணும். ஆகவே இப்பதிகம் வல்லார் நித்யஸூரிகளைக் கேட்பிக்க வல்லவராவர் என்று பயனுரைத்ததாகவே ஆயிற்று.) 11 | காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11 | தள் கனைகழல்கள் காட்டி,Thal kanaikazhalgal kaatti - தன் திருவடிகளைக் காட்டியருளி பாட்டு ஆய தமிழ் மாலை ஆயிரத்துள்,Paatu aaya thamizh maalai aayirathul - பாட்டாயிருக்கிற தமிழ்த் தொடையான அயிரத்துள் கடு நரகம் புகல் ஒழித்த,Kadu naragam pugal ozhiththa - கடுமையான ஸம்ஸாரநரக ப்ரவேசத்தை யொழித்த செவிக்கு இனிய செம் சொல் இப்பத்தும்,Sevikku iniya sem sol ippaththum - கர்ணம்ருதமான செவ்விய சொற்களினாலாகிய இப்பதிகத்தை வாட்டாறு எம்பெருமானை,Vaattaaru emperumaanai - திருவாட்டாற் றெம்பெருமானைக் குறித்து வளம் குருகூர் சடகோபன்,Valam kurukoor sadagopan - ஆழ்வார் (அருளிச்செய்த) வானவர்கள் கேட்டு ஆரா,Vaanavargal kaettu aaraa - நித்ய ஸூரிகள் முக்தர்கள் வாயிலாகக் கேட்டு திருப்தி பெறமாட்டார்கள். |