திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3733 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3733திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமானுடைய எந்த சீல குணத்தில் தாம் ஆழங்காற்பட்டுக் களைத்தாரோ அக்குணத்தில் பிறரும் ஆழ்ந்து வருந்தாமைக்காக எச்சரிக்கை செய்கிறார் முதலடியால்.) 1
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1
பதவுரை Show / Hide
செம் சொல் கவி காள்,Sem sol kavi kaal - செவ்விய சொற்களை யுடைய கவிகளே
என்னெஞ்சுள்ளும் உயிருள்ளும் கலந்து,En nenjullum uyirullum kalandhu - என்னெஞ்சுக்குள்ளேயும் ஆத்மாவுக்குள்ளேயும் ஒரு நீராகக் கலந்து
உயிர் காத்து ஆள் செய்மின்,Uyir kaaththu aal seimin - உங்களை ஜாக்ரத்தையுடன் நோக்கிக் கொண்டு கவி பாடுங்கள்
நின்றார் அறியா வண்ணம்,Nindraar ariyaa vannam - அருகே நின்ற பிராட்டியர் முதலானாருமறியாதபடி (ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்...)
திருமாலிருஞ் சோலை,Thirumaalirunj solai - (...ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்) திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்கின்ற
அவை என் நெஞ்சும் உயிரும் உண்டு,Avai en nenjum uyirum undu - அந்த என்னெஞ்சையுமுயிரையும் பஜித்து
வஞ்சம் கள்வன் மா மாயன்,Vanjam kalvan maa maayan - வஞ்சனையும் களவும் மாயமுமே வடிவெடுத்த பெருமான்
தானே ஆகி (என்னைக் காண இடமின்றிக்கே),Thaane aagi (ennaik kaana idam inrikkae) - தானேயாகி
மாயம் கவி ஆய் வந்து,Maayam kavi aay vandhu - “ஆழ்வாரே! ளும்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றேன்” என்றொரு மாயம் செய்து வந்து
நிறைந்தான்,Niraindhaan - அவாப்த ஸமஸ்த காமனாயினான் (ஆதலால் செஞ்சொற்கவிகாஉயிர் காத்தாட் செய்மின் என்ன வேண்டிற்று)