| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3734 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (ஆழ்வார் தம்மோடு கலந்தபின் எம்பெருமாளுக்கு உண்டான பௌஷ்கல்யத்தைக்கண்டு இனியராகிறார் இப்பாட்டில்.) 2 | தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய் தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2 | என் உயிரை முற்றும் உண்டு,En uyirai mutrum undu - என்னை ஸர்வப்ரபாரத்தாலும் புஜித்து தன்னை தானே துதித்து,Thannai thaane thuthiththu - தன்னை (நான் துதித்ததாக வைத்துத்) தானே துதி செய்து தானே ஆகி நிறைந்து,Thaane aagi niraindhu - தானோருவனே நிறைவு பெற்றவனாய் எல்லா உலகும் உயிரும் தானே ஆய்,Ellaa ulagamum uyirum thaane aay - ஸமஸ்த லோகங்களும் அவற்றிலுள்ள பிராணி வர்க்கங்களும் தானே யென்னலாம்படி அவற்றுக்கு அந்தராத்மாவாய் எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே,Enakku thenae paalae kannalae amuthae - எனக்குத் தேனும் பாலும் கன்னலு மமுதுமான ஸகலவித போக்யமும் யான் என்பான் தானே ஆகி,Yaan enbaan thaane aagi - நானென்கிற வஸ்துவும் தானேயாய் திருமாலிருஞ் சோலை கோனே ஆகி நின்றொழிந்தான்,Thirumaalirunj solai konae aagi nindrozhindhaan - திருமாலிருஞ் சோலை யெம் பெருமான் தானேயாய் விட்டான் |