| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3735 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்கு மேன்மேலும் தம்பக்கலுண்டான அபிநிவேசம் எல்லையற்றிருக்கும்படியை யருளிச் செய்கிறார்.) 3 | என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான் இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3 | என் உயிரை முற்றும் உண்டு,En uyirai mutrum undu - என்னைப் பாரிபூர்ணாநுபவம் பண்ணி தென்னன் திருமாலிருஞ்சோலை,Thennan thirumaalirunj solai - தென்னரசன் கொண்டாடும் திருமாலிருஞ்சோலை மலை நிற்கிற திசை,Thisai - (அவ்வளவோடும் நில்லாதே) திக்கை நோக்கி என் மாயம்,En maayam - ஆக்கை இதனுள் புக்கு என்னுடைய ப்ராக்ருத சாரிரத்தினுள்ளும் புகுந்து கைகூப்பி சேர்ந்த யான்,Kaikooppi serndha yaan - அஞ்சலி பண்ணி அடிமைப் பட்ட நான் என்னை முற்றும் தானே ஆய் நின்ற,Ennai mutrum thaane aay nindra - என்னுடைய தேஹாதியநு பந்திகளெல்லாம் தானே யென்னலாம்படி நின்ற இன்னம் போவேனே கொலோ,Innam poveanae kolo - இனி இதுக்கவ்வருகு ஓர்டத்தேடிப் போக நினைப்பேனோ? மாயம் அம்மான் சேர்,Maayam ammaan ser - மாயப்பிரான் பொருந்தி வாழ்கிற அம்மான் திரு அருள் என் கொல்,Ammaan thiru arul en kol - எம்பெருமானுடைய பாரிப்பு என்னாயிருந்தது! |