| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3736 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்குத் தம்மிடத்திலுண்டான வியாமோஹாதிசயத்தைச் சொல்லி;க்கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில் அப்பெருமாளுக்குத் திருமாலிருஞ் சோலைமலையிலுண்டானவொரு வியாமோஹத்தைப் பேசுகிறார்.) 4 | என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4 | உலகும் உயிரும் தானே ஆய்,Ulagum uyirum thaane aay - ஸகலலோகங்களும ஸகலப்ராணிகளும் தானேயென்னலாம்படி அந்தரியாமியாய் நண்ணா அசுரர்நலிய,Nannaa asurarnaliya - (அவ்வளவோடும் நில்லாதே) விமுகர்களான ஆஸூரப்ரக்ருதிகள நசிக்கும்படியாக ஞாலத்தூடே நடந்து உழக்கி,Gnaalaththoode nadandhu uzhakki - பூமியெங்கும் நடையாயடியுலாவி தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை,Thenkolthisaikku nilatham aay nindra thirumaalirunj solai - தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற நாங்கள் குன்றம் கைவிடான்,Naangal kunram kaividaan - நமது திருமலையைக் கைவிடாதவனா யிருக்கிறான்; என் உடலம் நன்கு கைவிடான்,En udalum nangu kaividaan - என்னுடம்பிலே மிகவும் விருப்பம் பண்ணா நின்றான்; அம்மான் திரு அருள் என்கொல்,Ammaan thiru arul enkol - எம்பெருமானுடைய வியாமோஹத்தின்படி என்னே! |