திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3738 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3738திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (திருமாலிருசோஞ்லைமலையப்பனுடைய வியாமோஹாதிசயத்தை யருளிச்செய்கிறார்.) 6
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6
பதவுரை Show / Hide
சிவனும் பிரமஎம் காணாது,Sivanum Brahma em kaanadhu - சிவனுக்கும் பிரமனுக்கு மெட்டாதேயிருந்து
அரும் மால் எய்தி அடி பரவ,Arum maal eydhi adi parava - (அவர்கள்) அருமையான பக்தியைச் செலுத்தித் திருவடிகளைத் துதிக்க
அருளை ஈந்த அம்மான்,Arulai eenda ammaan - அவாகளுக்குத் தன் திருவருளைத் தந்தருளின பெருமானாய்,
செழு மூ உலகும்,Sezhu moo ulagam - விலகூஷணமான மூவுலங்களையும்
தன் ஒருமா வயிற்றின் உள்ளே வைத்து,Than orumaa vayittrin ullae vaiththu - ஒப்பற்ற பெரிய தன் திருவயிற்றினுள்ளே வைத்து
ஊழி ஊழி தலை அளிக்கும்,Oozhi oozhi thalai alikkum - கற்பந்தோறும் நன்றாகக் காப்பாற்றுமாவனான
திருமால்,Thirumaal - திருமகள் கொழுநன்
திருமாலிருஞ் சோலையானே ஆகி என்னை ஆளும் மால்,Thirumaalirunj solaiyaanai aagi ennai aayum maal - திருமாலிருஞ் சோலையிலே நின்று கொண்டே என்னை யாட்கொள்வதில் பெரும்பித்தனாயிராநின்றான்.