திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3739 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3739திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (இப்போது தம்முடைய ஸம்த்திக்கு அடி திருமலையாகையாலே இத்திருமலை தானே நமக்கு ப்ராப்யமென்று திருமலையைக் கொண்டாடுகிறார்.) 7
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7
பதவுரை Show / Hide
என் அம்மானே அருளை ஈ என்னும்,En ammaanai arulai e ennum - எம்பெருமானே! உன்னருளைத் தந்தருள்வேணும் என்று வேண்டுகிற
முக்கண் அம்மானும்,Mukkan ammaanum - எம் சிவபிரானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும்,Therul kol Brahman ammaanum - நல்லறிவு வாய்ந்த நான் முகக் கடவுளும்
தேவர் கோஎம் தேவரும்,Devar koem devarum - தேவேந்திரனும் முப்பத்து மூவரமரர்களும்
இருள்கள் கடியும் முனிவரும்,Irulgal kadidum munivarum - அஜ்ஞானங்களைப் போக்கவல்ல முனிவர்களும்
ஏத்தும்,Aethum - துதிக்கும் படியான
அம்மான்,Ammaan - எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமி;டமான
திருமலை,Thirumalai - திருமலை எதுவென்றால்;
மருள் கள் கடியும் மணிமலை,Marulgal kadidum manimalai - மருள்களை யெல்லாம் தவிக்கும் அழகியமலையான
திருமாலிருஞ் சோலைமலையே,Thirumaalirunj solai malaiyae - தெற்குத் திருலையேயாகும்.