| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3740 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (திருமாலிருஞ் சோலைமலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடமலை முதலாகத் தானெழுந்துருளியிருக்கும் திவ்விய தேசங்களெல்லவறாறலும் தனக்குப் பிறக்கும் ப்ரீதியை என்னுடைய அவயங்களிலே ஸம்ச்லேஷத்தாலே பெற்றவனாய் ஒரு கூஷணமும் என்னைவிட்டுப் பிரிந்து தாரிக்கமாடடாதவனாயிரா நின்றான்; இவனுடைய அபிநிவேசமிருக்கும்படி என்னே! யென்று வியக்கிறாற்ப்பாட்டில்.) 8 | திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8 | திருமாலிருஞ் சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே,Thirumaalirunj solai malaiyae thiruparkadalai en thalaiyae - செற்குத் திருமலையேடும் திருப்பாற்கடலோடு மொக்க என் தலையையும் திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே,Thirumaal vaikundhame than thiruveengadame enathu udal - ஸ்ரீவைகுண்டத்தோடும் திருமலையோடு மொக்க என்னுடலையும், அருமா மாயத்து எனது உயிரே,Arumaa maayathu enathu uyirae - கடக்கவாரிதான ப்ரக்ருதியோடே கலசியிருக்கிற என்னாத்மாவையும் மனமே வாக்கே கருமமே,Maname vaakke karumamae - மனஸ்ஸையும் வாக்கையும் க்ர்யையும், என் ஊழி முதல்வன் ஒருவன்,En oozhi mudhalvan oruvan - ஸகலகாரண பூதனான ஸர்வேச்வரன் ஒருவன் ஒரு மா நொடியும் பிரியான்,Oru maa nodiyum priyaan - ஒரு கூக்ஷணத்தில் ஏகதேசமும் பிரிகிறலன். |