| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3742 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (கீழ்ப்பாட்டில் “உடலுமுயிரும் மங்கவொட்டே” என்று பிரார்த்திக்கச் செய்தேயும் இவருடைய திருமேனியிலுள்ள விருப்பத்தினாலே எம்பெருமான் பின்னையும் மேல் விழுந்து ஆதாரிக்க, ஐயோ! ஸர்வஜ்ஞனான இவனுக்கு இவ்வுடலின் ஹேயத்வம் தெரியவில்லையே! ஹேயங்களா இருப்பத்துநான்கு த்ததுவங்களினால் புணர்க்கப்பட்டது இது என்று உண்மையை யெடுத்துக்காட்டினால் இந்த நப்பாசை தவிரக்கூடம் என்று நினைத்து அரை யெடுத்துரைக்கிறாரிப்பட்டில்.) 10 | மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம் இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10 | திருமாலிருஞ் சோலை மேய,Thirumaalirunj solai meya - தெற்குத் திருமலையில் வாழ்கின்ற நங்கள் கோனே,Naangal koonae - எம்பெருமானே! யானே நீ ஆகிஎன்னை அளித்தானே,Yaanae nee aagi ennai aliththaanae - நமக்குள் ஐக்கியமாம்படி என்னை ரகூஷித்தவனே! பொங்கு ஐம்புலஎம்,Pongu aim pulam - கிளர்ந்து வருகின்ற சப்தாதி விஷயங்கள் ஐந்தும் பொறி ஐந்தும்,Pori aindhum - ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும் கருமேந்திரிமம்,Karumeendhri mam - கருமேந்திரியங்கள் ஐந்தும் ஐம்பூதம்,Aim boodham - பஞ்ச பூதங்களும் இங்கு,Ingu - ஸம்ஸார நிலைமையில் இவ் உயிர் ஏய் பிரகிருதி,Ivv uyir eyy pragiruthi - ஜீவனோடே கலசின மூலப்ரக்ருதியும் மான ஆங்காரம் மனங்கள்,Maan aangaara manangal - மஹாஎம் அஹங்காரமும் மனஸ்ஸூமாகிற உன் மா மாயை மங்க ஒட்டு,Un maa maayai manga ottu - உனது பெரிய மாயையைக் கழித்துத்தர ஸம்மதித்தருள வேணும். |