| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3743 | திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக இவர் அர்த்தித்த படியே ஈஸ்வரனுடைய விரோதி நிரசன உத்யோகத்தைச் சொல்லிக் கொண்டு அதுவே இத்திருவாய் மொழிக்குப் பலமாக அருளிச் செய்கிறார்.) 11 | மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத் தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11 | மான் ஆங்காரம் மனம் கெட,Maan aangaara manam keda - மஹான் அஹங்காரம் மனம் என்னுமிவை கெடும்படியாகவும் வன்கையர்; ஐவர் மங்க,Vankaiyar; aivar manga - கொடிய இந்திரியங்களைந்தும் தொலையும்படியாகவும் தான் ஆங்காரம்,Thaan aangaaraam - தானே அபிமானியாய்ப் புகுந்து தானே தானே ஆனானே,Thaane thaane aananae - ஆத்மாத்மீயர்கள் தானேயாயிருக்கிற பெருமானை, தேன் ஆங்காரம் பொழில்,Then aangaara pozhil - வண்டுகனுடைய செருக்கையுடைத்தான சோலை சூழ்ந்த குருகூர்,Kurukoor - திருநகாரிக்குத் தலைவரான சடகோபன் சொல்,Sadagopan sol - ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில் மான் ஆங்காரத்து இவை பத்;தும்,Maan aangaaraaththu ivai paththum - மஹதஹங்காரதி ரூபமான ப்ரக்ருதி தொலைவதற்காகச் சொன்ன இப்பதிகம். திருமாலிருஞ் சோலை மலைக்கே,Thirumaalirunj solai malaikke - திருமாலிருஞ்சோலை விஷயமாயி;ற்று. |