| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3745 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இதுக்கு முன்பு தான் ஸர்வேச்வரனாயிருந்தும் என்னோடு கலக்கப் பெறாமையினாலே குறைவாளானாயிருந்தவன் நிர்ஹேதுகமாக என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து பூர்ணனானானனென்கிறார்.) 2 | பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2 | பேரே உறைகின்ற பிரான்,Pere uraikindra piraan - திருப்பேர் நகாரில் நித்திய வாஸம் பண்ணு மெம்பெருமான் இன்று வந்து பேரேன் என்று,Inru vandhu peren endru - இன்று தானே விரும்பி வந்து இனிப் பேரமாட்டேனென்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்,En nenju niraiya pugundhaan - என்னெஞ்சிலே தான் பாரிபூற்ணனாம்படி புகுந்தான்; ஏழ்காரி ஏழ்கடல் ஏழ் மலை உலகு உண்டும்,Ezhkaari ezh kadal ezh malai ulagu undum - (ஆகவே) ஏழேழான மேகங்களும் கடல்களும் மலைகளுஞ் சூழ்ந்த உலகங்களை யெல்லாமமுது செய்தும் ஆரா வயிற்றானை,Aaraa vayitranai - நிறையாத திருவயிற்றையுடைய அப்பெருமானை அடங்க பிடித்தேன்,Adanga pidithen - பரிபூர்ண விஷயீகாரம செய்தானாகப் பண்ணிக் கொண்டேன். |