| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3746 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் நிர்வேஹதுகமாகத் தம்மோடே வந்து கலந்தபடியைச் சிந்தித்து இவன் திருவடி எனக்கு இப்படி எளிதானவாறு என்னே என்று வியக்கிறார்.) 3 | பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3 | கொடி கோபுரம் மாடங்கள் சூழ் திரு பேரான்,Kodi kopuram maadangal soozh thiru peraan - கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேர் நகரை உறைவிடமாகவுடைய பெருமானுடைய அடி சேர்வது,Adi servadhu - திருவடிகளை சேருகையாயானது எனக்கு எளிது ஆயின ஆறு,Enakku ezhidu aayina aaru - எனக்கு எளிதான விதம் என்னே! பிடித்தேன்,Pidiththen - அவன் திருவடிகளைப் பிடிக்கப் பெற்றேன்; பிறவி கெடுத்தேன்,Piravi keduththen - (அது அடியாக) ஸம்ஸாரம் தொலையப் பெற்றேன்; பிணி சாரேன்,Pini saarein - பிணிகள் வந்து அணுகாவகை பெற்றேன்; மனை வாழ்க்கையுள்,Manai vaazhkaiyul - ஸம்ஸாரத்தில் நிற்பது ஒர் மாயையை,Nirpadhu or maayaiyai - நிற்கையாகிற அஜ்ஞானத்தை மடித்தேன்,Madiththen - நிவ்ருத்தமாக்கிக் கொண்டேன். |