திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3747 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3747திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (தமக்குத் திருநாட்டைக் கொடுத்தருள்பவனாயிராநின்ற எம்பெருமானுடைய படியை யநுஸந்தித்துத் தாம் களிக்குமபடியைப் பேசுகிறார்.) 4
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக் களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன் கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான் தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4
பதவுரை Show / Hide
கிளி தாவிய,Kili thaaviya - கிளிகள் தாவம்படி செறிந்த
சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்ட
திரு பேரான்,Thiru peraan - திருப் பேர்நகாரில் வாழுமெம்பெருமான்,
தெளிது ஆகிய,Thelidu aagiya - தெளிந்த நிலமான
சேண் விசும்பு,Sen visumbu - பரமாகாச மென்னும் திருநாட்டை
தருவான்,Tharuvaan - தருபவனாயிராநின்றான் (ஆனது பற்றி)
என் கண்கள்,En kangal - (விடாய்த்த) எனது கண்கள்
எளிது அயின ஆறு என்று களிப்ப,Ezhidu aayina aaru endru kalippa - இந்த எளிமைக்கு ஈடுபட்டுக் களித்ததாக
களிது ஆகிய சிந்தையன் ஆய்களிக்கின்றேன்,Kalidu aagiya sindhaiyan aaykalikkindren - பரமானந்த சாலியான நெஞ்சையுடையேனாயினேன்.