| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3749 | திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் தமக்கு இருப்பிடமான கோயில்கள் பலவுண்டாயிருக்க ஒர்டமில்லாதாரைப் போலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்து க்ருத க்ருதயனானானென்கிறார்.) 6 | திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6 | திருப் பேர் நகரான்,Thirup per nagaraan - திருப்பேர் நகாரிலே வர்த்திப்பவானாய் திருமாலிருஞ் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்,Thirumaalirun cholai poruppe uraiginra piraan - திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணுமவனால் இப்பா பரமபோக்யமான பல தலங்களையுடையனான எம்பெருமான் இன்று வந்து,Endru vandhu - இன்று என்பாலெழுந்தருளி இருப்பேன் என்று,Eruppein endru - ளும்மிடத்திலேயே யிருக்கக் கடவேனேன்று சொல்லி என் நெஞ்சு நிறைய புகுந்தான்,En nenju niraiya pugundhaan - என்னுள்ளம் பூர்ணமாகும் படி புகுந்தான்; விருப்பே பெற்று,Viruppe petru - அவருடைய அபிமானத்தைப் பெற்று அமுதம் உண்டுகளித்தேன்,Amudham undugaliththen - அம்ரதபானம் பண்ணிக் களித்வனாயினேன். |